நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் அப்டேட் கேட்க, நொந்து போன அஜித் அறிக்கை விடும் அளவுக்கு சென்றது. இந்நிலையில் மார்ச் 25ல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது. இந்தச்சூழலில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், வலிமை பட ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவை சந்தித்த போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து, ''வலிமை ஆக்ஷன் வேற லெவல்'' என பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கினர்.