திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். கும்கி படத்தை அடுத்து இந்த படத்தையும் யானை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் படமாக்கியிருக்கிறார் பிரபுசாலமன். இப்படம் மார்ச் 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று(மார்ச் 3) காடன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை நகரமாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவர் இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாக போராடுகிறார் ராணா. இப்படியொரு கதைக்களத்தில் தான் காடன் படம் உருவாகியிருப்பதை அந்த டிரைலரில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு, ''யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்'' என ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொயித்ரா இசையமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.