அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பி.வாசு தயாரானபோது அதில் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதன்காரணமாக ரஜினிக்கான அந்த கதையில் ராகவா லாரன்சை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சந்திரமுகி-2 உருவாக இருப்பது போன்று பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அப்படம் குறித்த பேச்சே இல்லாததோடு, ராகவா லாரன்சும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சந்திரமுகி-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்திரமுகி-2 படம் கைவிடப்படவில்லை. தற்போது நான் நடித்து வரும் ருத்ரன் முடிந்ததும் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவித்து அப்படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.