விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
படம் : சந்திரமுகி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : ரஜினி, ஜோதிகா, பிரபு, வடிவேலு
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : சிவாஜி புரொடக் ஷன்
பாபா படத்தின் தோல்வியால் எழுந்த விமர்சனத்திற்கு, நான் யானை அல்ல; குதிரை. விழுந்தவுடன் எழுந்து விடுவேன் என, ரஜினி சொல்லி அடித்து வெற்றி பெற்ற படம், சந்திரமுகி. தியேட்டரில் நீண்ட நாள் ஓடிய ஒரே தென்மாநில படம் இது என்ற பெருமை பெற்றது. மொத்தம், 890 நாட்கள் ஓடியது!
மணிச்சித்திரதாழு என்ற மலையாள படத்தை, பி.வாசு, தெலுங்கில் அப்தமித்ரா என, ரீமேக் செய்தார். அதைப் பார்த்த ரஜினி, அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய கோரினார். அது தான் சந்திரமுகி! சந்திரமுகி கதாபாத்திரத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர். இறுதியில், ஜோதிகா ஒப்பந்தமானார். ஜோதிகாவின் நடிப்பிற்கு, தீனி போட்ட படங்களில், இதுவும் ஒன்று.
சந்திரமுகி கதாபாத்திரத்தில், நடிப்பின் ராட்சசியாக மாறியிருப்பார். வேட்டையனாக வரும் ரஜினியின், லகலக... மேனரிசம், திரையரங்கை அதிர செய்தது. மாப்பு, வச்சிட்டான்யா ஆப்பு... என, வடிவேலுவின் காமெடி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சந்திரமுகியின் அழகான ஓவியம், ராஜா என்ற இளைஞனால் வரையப்பட்டது. தோட்டா தரணியின் கலை வெகுவாக பாராட்டப்பட்டது. வித்யாசாகர் இசையில், அனைத்து பாடல்களும் தாளம்போட செய்தன. தெலுங்கு மொழியில் அமைந்த, ராரா சரசகு ராரா... என்ற, க்ளைமேக்ஸ் பாடல், ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு என, அனைத்தும் மிக சிறப்பாக அமைந்து, ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றது.
இப்படம் ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி, ஜெர்மன், துருக்கி மொழிகளிலும், டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்காவில், 100 நாட்களை கடந்து ஓடிய, ஒரே தமிழ்ப்படம் என்ற பெருமை பெற்றது. ஜப்பானிலும், வசூலை அள்ளி குவித்தது.
பார்த்துக் கொண்டே இருக்கலாம், சந்திரமுகியின் அழகை!