"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஏப்ரல் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சுல்தான் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாரங்கல் ஸ்ரீனு என்பவர் ரூ. 7.5 கோடிக்கு வாங்கிருக்கிறார். கார்த்தியின் கைதி படம் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வசூலித்ததால் சுல்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 2-ந்தேதி கோபிசந்தின் சீடிமார் என்ற படத்துடன் கார்த்தியின் சுல்தான் மோதப்போகிறது.