தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கூர்க்கை சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். டியர் காமிரேட் டப்பிங் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்த கன்னட படமான பொகரு தமிழில் செமதிமிரு என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மிஷன் மஜ்னு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கிறார் . இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்ட படம். இதில் நடிக்க ராஷ்மிகாவுக்கு படத்தின் இயக்குனர் சாந்தனு பகாச்சி பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது புஷ்பா, ஆடாலு மீக்கு ஜோஹரு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா. இதன் இடைவெளியில் அடிக்கடி மும்பை சென்று நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.