பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பொதுவாக ஹீரோக்கள் தான் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக ரிஸ்க் எடுத்து தங்களது உடல் எடையை கூட்டி குறைப்பார்கள்.. நடிகைகளில் அனுஷ்கா, கங்கனா போன்று ஒரு சிலர் தான் அப்படி செய்தார்கள். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அப்படி உடல் எடையை கூட்டிய அனுஷ்கா, அதன்பின் எடையை குறைக்கவே ரொம்பவே சிரமப்பட்டதும் தெரிந்த கதை தான்.
தற்போது அதேபோன்ற ஒரு ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டார், சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ். ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கும் படம் மூலம் அடியெடுத்து வைக்கும் பிரணிதாவுக்கு அந்தப்படத்தில் இரு வேடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் ஒரு கேரக்டருக்காக உடல் எடையை கூட்டி நடிக்க வேண்டியுள்ளதாம். இதற்காக செயற்கையான ஏற்பாடுகள் எதையும் விரும்பாத பிரணிதா தனது உடல் எடையை கூட்டும் ரிஸ்க்கை எடுக்க துணிந்து விட்டாராம்.




