பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் தயாராகி இங்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் 'பாகுபலி 2'.
இப்படத்தை தமிழிலும் சேர்தே படமாக்கியதாகச் சொல்வார்கள். முதல் பாகத்திலாவது சில காட்சிகளில் உதட்டசைவிற்கும், வசனத்திற்கும் பொருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாவது பாகத்தில் பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது. 'பாகுபலி' இரண்டு பாகப் படங்களையும் தெலுங்கில் மட்டுமே முழுமையாகப் படமாக்கினார்கள்.
இந்நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் விலை சுமார் 42 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படத்தின் உரிமை 47 கோடியாம். அதைவிட ஐந்து கோடி குறைவு.
'பாகுபலி' படத்திலாவது தமிழ் ரசிகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள அது ஒரு பொதுவான சரித்திரப் படமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படம். அது எப்படி தமிழ் ரசிகர்களை படத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க வைக்கும் என இங்கு கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். 42 கோடியே அதிகம்தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.