துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிலர் கோயில் கட்டினார்கள். இந்நிலையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்து கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயில், ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவிடமாகவும், படிப்பளிக்கும் கூடமாகவும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்", என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.