சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. கடந்த டிசம்பர் மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இன்னமும் அவரது மரணம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சமூகவலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
அவர் கடைசியாக நடித்த படமான கால்ஸ் இம்மாதம் 26ம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஜெ.சமரீஷ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சித்ராவின் சமீப கால நிகழ்வுகள் படத்தின் டிரைலருடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுவரை 1.70 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் கால்ஸ் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை சித்துவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதோடு இந்தப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ளது.