படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
“சினிமா என்பது உங்களுக்கு பொழுதுபோக்கு, ஆனால், எனக்கு அது தொழில்” என அஜித் சொல்லி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே வெறுப்பு அரசியலை சில அஜித் ரசிகர்கள் விதைக்க ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று சென்னையில் முடிந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் நடுவே மைதானத்தில் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு லேசாக நடனமாடினார் அஷ்வின். அது மட்டுமல்ல ஒரு பேட்டியில் தினமும் அந்தப் பாடலைக் கேட்டார் ஒரு புத்துணர்வு வந்துவிடும் என்றார்.
கடந்த மாதம் கூட 'வாத்தி கம்மிங்' பாடலின் சிறு பகுதியை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து 'வேற மாறி' என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், அஷ்வின் ஒரு விஜய் ரசிகர் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். விஜய்யையோ, விஜய் படங்களையோ யார் பாராட்டினாலும் அவர்களுடன் சண்டைக்குச் செல்வதையே தங்களுடைய வழக்கமான ஒரு வேலையாக அஜித் ரசிகர்கள் சிலர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.