பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

புச்சிபாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் 'உப்பெனா'.
இப்படம் இதுவரையிலும் சுமார் 50 கோடி வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அறிமுக நடிகரின் படம் ஒன்றிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது-
இப்படத்தை இயக்கிய புச்சிபாபு அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார். விஜய் சேதுபதிக்கு இனி தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லுமளவிற்கு இந்தப்படம் அமைந்துவிட்டது.
இன்று இப்படத்தின் வெற்றிவிழாவை ராஜமுந்திரியில் கொண்டாட உள்ளார்கள். சிறப்பு விருந்தினராக ராம்சரண் கலந்துகொள்ள உள்ளார். பட வெளியீட்டிற்கு முந்தைய விழாவில் ராம்சரண் அப்பா சிரஞ்சீவி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்படத்தின் மற்ற மொழி ரீமேக் உரிமைகளுக்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளதாம்.




