சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான தெலுங்கு படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'உலகமகன்க் என்ற தனது கதையை திருடி உப்பெனா படம் எடுக்கபட்டிருப்பதாக அவர் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று விஜய் சேதுபதியின் வழக்கறிஞர் நீதிபதியிடம், விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிமன்றம் விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உப்பென்னா பட தயாரிப்பாளர், இயக்குனர் மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.