பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினத்தை ஒரு முன்னணி நடிகை பொதுவாக பெரிய ஸ்டார் ஓட்டலில் தான் கொண்டாடுவார். ஆனால், காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாதாரண மெஸ்ஸில் தன்னுடைய காதலர் தின டின்னரை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பொள்ளாச்சியில் ஒரு தம்பதியினர் நடத்தும் அந்த மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டதோடு அவர்களைப் பற்றியும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகியோர் அதிக அன்புடன் உணவைப் பரிமாறுவார்கள். அதனால்தான் கடந்த 27 வருடங்களாக அவர்களது உணவு தொடர்ந்து சுவையாக உள்ளது. இந்த சிறிய கடைக்கு நான் கடந்த ஒன்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறி அந்த தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் இந்த எளிமையான குணத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.