அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
‛ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும்' என நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் அறிக்கை:
என் மீதும், படங்கள் மீதும் அபரிதமான அன்பு கொண்டு எதையும் எதிர்பாராமல் அன்பு செலுத்தும் ரசிகர்களே, கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் தகவல் கேட்டு, அரசியல், விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல் வருத்தப்பட வைக்கிறது.
முன்பே அறிவித்தபடி வலிமை படத்தின் செய்திகள், உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்.
நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள், பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், கடைபிடிக்க வேண்டும். என் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்