ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு சினிமாவில் முதலிடத்தை பிடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதோடு தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்திருப்பவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க தீவிர முயற்சி எடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.
இந்த நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65ஆவது படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ராஷ்மிகா மந்தனாவை விஜய் படத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தெலுங்கு படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேறி விட்டதாகவும், அதையடுத்து அந்த பட வாய்ப்பை பூஜா ஹெக்டே கைப்பற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.