சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ், லைவ் டெலிகாஸ்ட். ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கிறது. இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன்.
இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக பணியாற்றியவர். தற்போது அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆரி நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
கதை திருட்டு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 2005 காலகட்டத்தில் வெங்கட்பிரபுவும் நானும் நண்பர்களாக இருந்தோம். அவரை ஹீரோவாக வைத்து நான் ஒரு படம் இயக்குவதற்காக, இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஒருநாள் திடீரென வெங்கட்பிரபு என்னிடம் வந்து, தனது நண்பரான சிங்கப்பூரை சேர்ந்த கேபிடல் சினிமாஸ் சரவணன் என்பவர் மூலமாக தனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறினார். இதற்காக சில நாட்களில் நேரடி ஒளிபரப்பு என்கிற ஒரு ஹாரர் கதையை உருவாக்கி வெங்கட்பிரபுவிடம் கூறினேன்.
அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டது. இந்தப்படத்தின் முழு திரைக்கதையையும் வசனத்தையும் என்னையே உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இந்த கதையை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன். தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், படத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும் இயக்குனர் வெங்கட் பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாய் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார். இதனால் நேரடி ஒளிபரப்பு கதை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
அதேசமயம் வெங்கட் பிரபுவிடம் வேறு ஒரு கதை உள்ளது அதை பண்ணலாம் என்று கூற, அப்போது வெங்கட் பிரபு தெருவோர கிரிக்கெட் விளையாடுபவர்கள் நட்பு என்கிற வரியை மட்டும் என்னிடம் கூறினார். தெருவோர கிரிக்கெட் என்ற புள்ளியை மட்டுமே வைத்து சென்னை 28 படத்திற்கான முழு கதையையும் திரைக்கதையையும் நானே தயார் செய்து வசனத்தையும் எழுதினேன்.
என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதைதான் சென்னை-28. ஆனால் மொத்த படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததுமே அதன்பின் வந்த நாட்களில் வெங்கட் பிரபுவும், எஸ்பிபி சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் அந்தப்படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியே வந்துவிட்டேன்.
சென்னை 28 படத்தின் டைட்டில் கார்டில் கதை, திரைக்கதை, வசனம் என என் பெயர் போடும்படி கேட்டேன். ஆனால் திரைக்கதை, வசனம் என்று போட்டுவிட்டு அதன் அருகில் சிறியதாக உதவி என்று சிறியதாக போட்டார் வெங்கட்பிரபு. அதன்பிறகு அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதும், வெங்கட்பிரபு மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என என்னை அழைத்தார். ஆனால் எனக்கு அவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் இல்லாததால் அவரது அழைப்பை நிராகரித்து விட்டேன்.
இந்த நிலையில்தான் 'லைவ் டெலிகாஸ்ட்' என்கிற பெயரில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன் மற்றும் சரண் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக்கொடுத்து, பட்ஜெட் அதிகம் என ஒதுக்கி வைத்தார்களே, அதே ஸ்கிரிப்ட்டை தான் தற்போது வெங்கட்பிரபு லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரியஸாக இயக்கியுள்ளார்.
கடந்த 2007லேயே, இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும் கூட நேரடி ஒளிபரப்பு என்று டைட்டில் வைத்துதான் பதிவு செய்துள்ளேன். அதையே தற்போது ஆங்கிலத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற பெயரிலேயே வெப்சீரிஸாக இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு.
என் பெயரில் அந்தக்கதை இருக்கும்போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட்பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் . வெங்கட்பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.
காரணம் இதே கதையை, சீரியஸாக இயக்குவதற்காக வி கோஷ் மீடியா என்கிற நிறுவனத்துடன் பேசி கடந்த அக்டோபர் மாதம் தான், அதற்காக முன்பணமும் வாங்கியுள்ளேன். இந்த நிலையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். இதுகுறித்து தற்போது நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன். விரைவில் நேரில் சென்று அவர்களிடம் இது குறித்து பேச இருக்கிறேன்.. எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சசிதரன் கூறியுள்ளார்.