தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித் அங்கிருந்து வட இந்தியாவின் பல பகுதிகளுக்கு பைக் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது நண்பர்கள் சிலரும் சென்றுள்ளனர். தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஐதராபாத் திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்ட தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டு எழுதியிருப்பதாவது:
சென்னை, கோவை, சென்னை, ஐதராபாத், வாரனாசி, காங்டாக், லக்னோ, அயோத்யா, ஐதராபாத், சென்னை என 10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார் அஜித். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித்தான். அவர் சுத்தமான தங்கம். இந்த புகைப்படம் அஜித்தின் சம்மதத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரே மூச்சில் அவர் 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துவிட்டார் என்பதை உங்களிடம் சொல்வதற்காக.
இவ்வாறு தினேஷ்குமார் எழுதியிருக்கிறார்.