தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
தமிழ் சினிமாவில் திரைப்படம் சம்பந்தப்பட்ட விளம்பர செய்திகளில் அதிகம் அடிபடாதவர் அஜித். அவருடைய படத்தின் பிரமோஷன்களுக்கே அவர் வர மாட்டார். அப்படியிருக்க மற்றவர்களது படத்தை அவர் பாராட்டியிருப்பது அபூர்வமான ஒரு விஷயம்தான்.
தெலுங்கில் குரு பவன் இயக்கத்தில் சுமந்த், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா மற்றும் பலர் நடித்துள்ள 'இதே மா கதா' படத்தின் டீசரை அஜித் பாராட்டியுள்ளதாக அப்படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
அதில் படத்தைப் பாராட்டி அஜித், “எனது நீண்ட நாள் நண்பர் ராம்பிரசாத் காரு உங்களது, 'இதே மா கதா' டீசரைக் காட்டினார். டீசரை நான் மிகவும் ரசித்தேன். விஷுவல்களை உண்மையாகவே நேசித்தேன், அவற்றை எடுத்த விதம் அருமை. பைக் ரைடிங் என்பது எனக்கும் மிகவும் பிடிக்கும், அதனால் இந்த டீசரில் உடனடியாக நான கனெக்ட் ஆகிவிட்டேன். உங்கள் அனைவரையும் சீக்கிரமே சந்திக்க ஆசைப்படுகிறேன். வெற்றிகள் கிடைக்க மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் வாழ்த்துகளுக்கு படக்குழுவினர் மிகவும் மகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்கள். அஜித் குறிப்பிட்டுள்ள ராம்பிரசாத் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.