2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நாட்டு நடப்புகள் குறித்து துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்வார். ஏற்கெனவே 2 முறை டுவிட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை முடக்கி அவரை எச்சரித்துள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கங்கனா கவலைப்படவில்லை. இப்போது 3வது முறையாக முடக்கப்பட்டு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சீரிசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்கனா தனது கருத்தை டுவிட்டரில பதிவு செய்தார். இந்த கருத்து இரு மத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த பதிவை நீக்கினார் கங்கனா.
இந்த நிலையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை தற்காலிமாக முடக்கி வைத்த டுவிட்டர் நிர்வாகம், ''டுவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுந்திரமா வெளியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். என்றாலும் எங்கள் கொள்கைபடி எந் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளது.