சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
பிரபல பாலிவுட் இயக்குனர் சாஜித் கான். ஹவுஸ்புல் முதல் மற்றும் 2ம் பாகம், ஹிம்மத்வாலா, ஹம்ஸ்கல், ஹேய் பேபி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். ஹேப்பி நியூ ஈயர் உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் பராக்கானின் சகோதரர் ஆவார்.
இவர் மீது இப்போது பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார். ஷெர்லின் சோப்ரா காமசூத்ரா, தோஸ்தி, கேம், பீப்பர், யுனிவர்சிட்டி, எ பிலிம் பை அரவிந்த் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். இந்தி பிக்பாஸ் 3வது சீசனிலும் கலந்து கொண்டவர்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் 2005ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். இந்தி திரையுலக மாபியா வலிமையானது.
நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார். என்று தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.