மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த 2019ல் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் அதன்பின்னர் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படங்களின் படப்பிடிப்புகள் தவிர, 2017ல் கேரளாவில் மொபைல்போன் ஷோரூம் திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வந்தபோது கொச்சி நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவரை காண்பதற்கு கூட்டம் கூடியது.
ஆனால் தற்போது அதே கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு எந்தவித பரபரப்புமின்றி வருகை தந்திருக்கிறார் சன்னி லியோன்.. இந்தமுறை அவர் வந்ததுள்ளது தனியார் ரிசார்ட் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காகவும் அப்படியே கேரளாவை சுற்றி பார்ப்பதற்காகவும் தான். அந்தவகையில் தனது குடும்பத்துடன் வந்துள்ள சன்னி லியோன் தற்போது, கொரோனா பரிசோதனை நடவடிக்கையாக, ஒரு வார காலத்திற்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம் சன்னி லியோன்..