2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பாஸி பதானா நகரில் நடந்தபோது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. இதை தொடர்ந்து ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பை, போராடும் விவசாயிகள் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். ஜான்விகபூரை திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பாதுகாப்பாக அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதும் விவசாயிகள் விடவில்லை. ஓட்டல் முன்பும் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.