வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.. ஆனால் அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் ராசியில்லாத நடிகை என ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு சினிமாவில் அவரது ராசி ஒர்க் அவுட் ஆக தொடங்கியுள்ளது. அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அதிலும் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான அல வைகுண்டபுரம்லூ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் இவரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றது.
இந்தநிலையில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் தற்போது தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். இந்த மகிழ்ச்சியை தன்னந்தனியாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் பூஜா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேள்விகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கேக் ஒன்றுமே அனைத்துக்குமான பதிலாக இருக்கும்.. ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது” என கூறியுள்ளார் பூஜா.