''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இந்தியத் திரையுலகில் உள்ள மற்ற முன்னணி நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருடைய சேவை மனப்பான்மைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து மனதாரப் பாராட்டினார்கள்.
சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரான 'டேன்க்பன்ட் சிவா' என்பவர் சோனு சூட் பெயரால் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து தத்தளித்த நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றியும், மூழ்கி இறந்து போனவர்களின் சடலங்களை மீட்டுத் தரும் சேவையைச் செய்பவர் சிவா. அவருக்கு மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்துள்ளார்.
“சோனு சூட் சேவை எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதனால்தான் அவரது பெயரைச் சூட்டினேன்,” என சிவா தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைத்துப் பேசிய சோனு, “இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சிவாவைப் பற்றியும், அவரது சேவையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் போன்ற பல சிவாக்கள் நமக்குத் தேவை. ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.