பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். தற்போது மலையாளத்திலும், தெலுங்கிலும் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இவருக்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தெலுங்கில் நடித்துள்ள பரதா (பர்தா) என்கிற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் நடிகை சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாளத்தில் ஹிருதயம், ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது அனுபமாவிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், தெலுங்கு திரைப்படங்களில் உங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் சில நொடிகள் கண்கலங்கி எமோஷனல் ஆகிவிட்டார். அருகில் இருந்த இயக்குனர் உள்ளிட்டோர் அவரை ஆறுதல் படுத்தினார்கள். அதன் பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “இங்கு இருக்கும் ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவாக நடத்துகிறார்கள். அது என்னுடைய பாக்கியம். அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.