ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

நடிகர் விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியை பதிவு செய்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாரானபோது அதை தடுத்து நிறுத்தினார் விஜய். அதையடுத்து தனது அனுமதி இன்றி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர், கொடி மற்றும் தனது புகைப்படத்தை யாராவது பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த விஜய், சிலர் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்தார்.
அதையடுத்து அப்போதைக்கு கட்சி தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைத்த எஸ்.ஏ.சி., தற்போது மீண்டும் விஜய் மக்கள் இயக்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள ரசிகர்களை ஒன்றிணைத்து, புதிய கட்சியை தொடங்கும் வேலையில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள சில அதிருப்தி நிர்வாகிகளை களை எடுத்துள்ள விஜய், அதையடுத்து மக்கள் இயக்கத்தின் இரண்டாவது நிர்வாகிகள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, மீனவரணி, வழக்கறிஞர் அணி, வர்த்தக அணி போன்ற அணிகளின் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
அதோடு, மேற்கண்ட நிர்வாகிகளின் ஆலோசனைப்படி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் மக்கள் இயக்கத்தை மேன்மேலும் சிறப்பிக்குமாறு ரசிகர்கள், ரசிகைகளை கேட்டுக் கொண்டுள்ளார் விஜய். மேலும், எனது புகைப்படம், இயக்கத்தின் பெயர்- மற்றும் கொடி ஆகியவற்றை மாநில- மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் அணித்தலைவர்களின் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.