படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'ஈஸ்வரன்' பட வெளியீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது.
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் படம் வெளியாகும் அன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கினார்கள்.
அடுத்து சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தனக்கு நஷ்ட ஈடாக சிம்பு தர வேண்டிய முதல் தவணை 2.4 கோடியை இந்தப் படத்தில் தர வேண்டும், அதைத் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், படத்தின் டிஜிட்டல் கன்டென்ட்டை தியேட்டர்களுக்கு அனுப்பும் க்யூப் நிறுவனம் இப்பட வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. அந்தக் கடித விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.
இதனிடையே, சிம்பு விவகாரம் குறித்து இன்று கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், இனி சிம்பு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி கம்பெனி படத்தை டிஜிட்டல் மாற்றத்திற்காக 'லோட்' செய்துவிட்டதாக டுவீட் செய்துள்ளது.
பட வெளியீடு தொடர்பாக இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் படம் நாளை தியேட்டர்களில் எப்படியும் வெளியாகிவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.