ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகியள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தியேட்டர்களில் முதலில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. அதனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவே தற்போது நீடிக்கிறது.
ஆனால் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான .பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அளவுக்கதிகமான கூட்டம் கூட அனுமதித்ததாக 188, 269 ஆகிய பிரிவுகளில் தியேட்டர் நிர்வாகத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஒரு தியேட்டரின் விதிமீறல் தான்.. வெளிவராதது எத்தனையோ..?