விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் நடிகர் ஆரி. ஏற்கனவே சமூகப் பிரச்சினைகள் பலவற்றிற்கு குரல் கொடுத்து வந்ததால் ஆரிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. பிக்பாஸ் வீட்டிலும் சரியாக நடந்து கொண்டு அந்தப் பெயரை அப்படியே தக்க வைத்து வருகிறார் ஆரி. சொல்லப் போனால் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் யாருக்கும் கிடைக்காத அளவிற்கு ஆரிக்கு இம்முறை நல்ல பெயர் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியின் போது ஆரிக்கு ஆதரவாகப் பதாகை, பிரச்சாரத்தின் போது கமலிடம் ஆரிக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் என ஆரியின் ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். பெரும்பாலான வாரங்களில் ஆரிக்கு எதிராகப் பேசிய போட்டியாளர்களே மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். இது சமூகவலைதளங்களில் ஆரிக்கு உள்ள செல்வாக்கை காட்டி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆரிக்கு தனியார் வலைதளங்களில் வரும் வாக்குகள் எல்லாம் அதிகாரமற்றது என்றும் ஆரியின் பி.ஆர்.ஓ குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. அவை போலியானது என்றும் ரக்ஷன் பதிவு செய்திருந்தார்.
ரக்ஷனின் இந்த பதிவைப் பார்த்து ஆரி ரசிகர்கள் கோபமாகி விட்டனர். ரக்ஷனுக்கு எதிராக அவர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட ரக்ஷன் உடனடியாக தனது பதிவு குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பதிவில், என்னுடைய முந்தைய பதிவு தவறுதலாக பதிவு செய்யப்பட்டு விட்டது. ஒரு சிலர் போன் செய்து சொன்ன பிறகே நான் அதைக் கவனித்தேன். ஆரி அண்ணன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எந்தவித உள்நோக்கத்துடனும் அந்தப் பதிவு செய்யப்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் அவரை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் என ரக்ஷன் தெரிவித்துள்ளார்.