சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சித் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், வரும் 16ம் தேதியுடன் பிக்பாஸ் முடிவடைய இருக்கிறது.
இம்முறை கொரோனா பிரச்சினை காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர், கொரோனா பரிசோதனைகள் எல்லாம் முறையாகச் செய்யப்பட்டே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இடையே கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இசைக்குழுவும் சமூக இடைவெளியுடன் தனித்தே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போட்டியாளர்களைச் சந்திக்க அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அவர்களையும் தனிமைப் படுத்தியே உள்ளே அனுப்பி வைத்தனர். இதனை போட்டியாளர்களின் உறவினர்களும் மறக்காமல் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்தே இருந்தனர். பலர் வேறு சில நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இப்படியாக தனிமைப்படுத்துதல் இல்லாமல் சுதந்திரமாக இருந்த அந்த முன்னாள் போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் இருப்பதால், போட்டியாளர்களின் உடல்நிலை பற்றிய அக்கறை பிக் பாஸ் தயாரிப்பு குழுவிற்கு இல்லாமல் போய் விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.