பகத் பாசில் படங்களை தியேட்டரில் வெளியிட எதிர்ப்பா? | ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா | நயன்தாரா பாணியில் தனி விமானத்தில் பறந்த தமன்னா | சினிமாவில் நடிக்காதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் | இரண்டு வாரத்தில் எனிமி டீசர் | ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா | மண்டேலா படம் பார்த்து யோகி பாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் | பாகுபலியை ஆர்ஆர்ஆர் மறக்கடித்து விடும் : லண்டன் தணிக்கை குழு உறுப்பினர் பிரமிப்பு | ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார் | என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்! |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கத்தி படத்தை அடுத்து இந்தப்படத்தில் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் அனிருத்.. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது தெரிந்த வரலாறு. அதேசமயம் இந்தப்படத்தில் இன்னொரு புதிய அம்சத்தையும் புகுத்தி இருக்கிறாராம் அனிருத். ரஜினியின் பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடலில் தேவா இசையமைத்த இசையில் முக்கிய பகுதியை மட்டும் எடுத்து, தர்பார் படத்தில் கண்ணுல திமிரு பாடலில் புகுத்தி ரீமிக்ஸ் செய்திருந்தார் அனிருத். அந்த பாடலும், அனிருத் பாட்ஷா இசையை புகுத்திய விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல மாஸ்டர் படத்திலும் விஜய் ரசிகர்களை மனதில் வைத்து இதேபோல ஒரு ரீமிக்ஸ் இசையை கொடுத்துள்ளாராம் அனிருத். அதாவது விஜய் நடித்த கில்லி படத்தில் வித்யாசாகர் இசையில் விஜய் கபடி விளையாடும்போதெல்லாம் ஒலிக்கும் உற்சாகமான பின்னணி இசையை, தனது கைவண்ணத்தில் மாஸ்டருக்காக ரீமிக்ஸ் பண்ணியுள்ளாராம் அனிருத். படத்தில் கபடி தொடர்பான ஒரு மாஸான காட்சிகளில் இந்த பின்னணி இசையை இணைத்துள்ளார்.