ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பிரபுசாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தினைத் தொடர்ந்து சண்டிவீரன், பொறியாளன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும், அலாவுதீனும் அற்புத கேமராவும், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை ஆந்திராவில் வைத்து ஆனந்தி திருமணம் செய்து கொண்டார். ஆனந்தியின் இந்த திடீர் திருமணம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென ஏன் ரசிகர்களுக்கு அறிவிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியும் எழுந்தது.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆனந்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் சாக்ரடீஸூம் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளார். தற்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படங்கள் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.