ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப் போன பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றன. வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீசாகின்றன.
வழக்கமாக இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போதும், தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுவதுண்டு. தற்போது 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், இம்முறையும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அரவிந்த்சாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.