கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என மாநில அரசு அளித்த உத்தரவு சரியல்ல என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு அதன் உத்தரவைத் திரும்பப் பெறும் எனத் தெரிகிறது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாநில அரசு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினால் 'மாஸ்டர்' படத்தை மட்டுமே திரையிடும் முடிவில் தியேட்டர்காரர்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஈஸ்வரன்' படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரையிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
50 சதவீத இருக்கைகளில் இரண்டு படங்கள் போட்டியிடுவது சரியல்ல. முதலில் பட வெளியீட்டை அறிவித்த 'மாஸ்டர்' படத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும், அப்படம் வெளிவரும்பட்சத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வருவார்கள் என்றும் தியேட்டர்காரர்கள் கருதுகிறார்களாம்.
இந்த யோசனைக்கு 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர் முன்வருவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரும் ஜனவரி 14 அன்று படத்தை வெளியிட கடந்த ஒரு வாரமாகவே விளம்பரப்படுத்தி வருகிறார். இப்போது படம் வரவில்லை என்றால் விளம்பரம் செய்த அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி வரும்.
சூழ்நிலைக்கேற்ப தியேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துக் கொள்ள அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல். இதனால், 'மாஸ்டர்' படம் ஜனவரி 13 அன்று வெளிவருவது உறுதி என்றே சொல்கிறார்கள்.