ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-13 அன்று தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. தியேட்டர்களில் பார்வையாளர்களின் அனுமதி தொடர்பாக ஒரு பிரச்சை ஓடி வருவதால் இதில் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது. இந்தநிலையில் தற்போது அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் டீசரும் மாஸ்டர் படத்துடன் இணைந்து தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.
வரும் ஜன-9ஆம் தேதி கோப்ரா படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட இருக்கிறார்கள். மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள லலித்குமார் தான் கோப்ரா படத்தின் தயாரிப்பாளர். அதனால் கோப்ரா படத்திற்கு இன்னும் மைலேஜ் கிடைக்கும் விதமாக, மாஸ்டர் பட ரிலீஸில் இருந்து பப்ளிசிட்டியை தொடங்குகிறார் என்றே சொல்லப்படுகிறது.