ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'.
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் நாயகி ராஷி கண்ணா இப்படத்திற்கான அவருடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து, “சூப்பர் திறமைசாலியான விஜய் சேதுபதி உடன், மற்றுமொரு அழகான பயணம் 'துக்ளக் தர்பார்' நிறைவுக்கு வந்தது. மறக்க முடியாத இப்படத்தைக் கொடுத்த இயக்குனர் தீனதயாளன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படம் இது. 'சங்கத்தமிழன்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.