ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஆனந்தி. பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கு நடித்து வந்தவர், பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கயல், சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, என் ஆளோட செருப்ப காணோம். விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. ஏஞ்சல், ராவணகூட்டம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று(ஜன 7) இரவு 8 மணிக்கு வாரங்கல்லில் உள்ள கோடம் கன்வென்சன் செண்டரில் ஆனந்திக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் பெயர் சாக்ரட்டீஸ். இது பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் தெரியவில்லை.