ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சென்னையில் பிறந்து வளர்ந்த கேரளத்து பொண்ணு ஸ்மிருதி வெங்கட். விளம்பர படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் மவுனவலை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஆரி ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மக்களை சென்று சேரவில்லை.
அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கிய தடம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் தன்யா ஹோப்தான் ஹீரோயின். ஸ்மிருதி வெங்கட் ஹீரோ அருண் விஜய்யை ஒருதலையாய் காதலிக்கும் ஆனந்தி என்ன கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் பேசப்பட்டது. ஸ்மிருதிக்கு சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.
ஆனால் அதன்பிறகும் ஏனோ ஸ்மிருதிக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்வில்லை. இடையில் தீர்ப்புகள் விற்கப்படலாம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் ஸ்மிருதி தனுஷ் நடிக்கும் தலைப்பிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 43வது படம். துருவங்கள் 16, நரகாசுரன், மாபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.




