அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

பிரபலங்கள் பயன்படுத்தும் பொருட்களை பற்றி அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. அதுவும் நடிகர், நடிகையர்கள் பயன்படுத்தும் வாட்ச் முதல் ஹேண்ட்பேக் வரை, அவர்களுக்கு பிரியமான பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா வைத்துள்ள கொகுசு கார்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2 கோடி மதிப்புடைய ரேஞ்ச் ரோவர் வொக் காருக்கு சொந்தக்காரர் சமந்தா. அதேபோல் அவருக்கு சொந்தமாக ஜாக்குவார் எக்ஸ்எப் கார் ஒன்று உள்ளது. அதன் விலை ரூ.62 லட்சம். ரூ.70 லட்சம் மதிப்புடைய அவ்டி க்யூ7, ரேஸ் கார் ரகமான ரூ.1.5 கோடி மிதிப்புடைய போர்ஷ் கேமேன் ஜிடிஎஸ், ரூ.2.3 கோடி ரூபார் மதிப்புடைய மெர்சடஸ் பென்ஸ் ஜி63 எஎம்ஜி ஆகிய கார்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் சமந்தார்.
இத்தனை கார்கள் இருந்தாலும் சமந்தாவுக்கு பிடித்தமான கார் ரேஞ்ச் ரோவர் தான் என கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரும் அடிக்கடி பயன்படுத்துவது அந்தக் காரைத் தானாம்.




