4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் ரிலீசாக வெளிவர இருக்கிறது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் விருந்தாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டீசரும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாணு தயாரிப்பில் உருவாகும் அப்படத்தின் டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. மேலும், இந்த டீசர் பொங்கல் தினத்தில் தியேட்டர்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷின் 'ஜகமே தந்திரம்' டிரைலர் பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது தனுஷின் இன்னொரு படத்தின் டீசரும் வெளியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.




