Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய பெயரில் தனி கட்சி தொடங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - கடும் அதிருப்தியில் விஜய்!

04 ஜன, 2021 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Vijay-disappoints-with-his-fathers-political-movie

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த மாதம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளியானதும் அப்பா தொடங்கும் கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்ததும் இல்லை. எனது படத்தை, இயக்கத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கட்சி பதிவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வேறு ஒரு பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்கு 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளதாக தெரிகிறது.தனது கட்சிக்கு விஜய் ஆதரவு இருப்பதாகவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று தானும் விஜய்யும் இணைந்து விட்டதாகவும், விஜய் தனக்கு மோதிரம் அணிவித்து புதிய அரசியல் பயணத்துக்கு வாழ்த்தியதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதனால் அப்பா - மகன் மீண்டும் இணைந்துவிட்டதால் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடும் அதிருப்தியில் விஜய்
இதுப்பற்றி விசாரித்ததில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக் கட்சி தொடங்க ஆலோசனை நடத்தியது உண்மை தான். ஆனால் விஜய்யை சந்தித்ததாக சந்திரசேகர் கூறியது உண்மையில்லையாம். காரணம் அன்றைய தினம் விஜய் ஊரிலேயே இல்லை என தெரிவிக்கிறார்கள். அரசியல் கட்சி துவங்கும் விவகாரத்தால் தந்தை மீது கடந்த சில மாதங்கள் முதல் இப்போது வரை அதிருப்தி மனநிலையில் தான் விஜய் உள்ளாராம். தன்னை வளர்த்து இந்தளவுக்கு வளர்த்துவிட்ட தந்தை இனி அமைதியாக ஓய்வெடுக்கவே விஜய் விரும்புகிறாராம். அதைவிடுத்து கட்சி ஆரம்பிக்கிறேன் என்ற பெயரில் அவர் மட்டுமல்லாது தன்னையும் சிக்கலில் சிக்க வைத்து விடுவாரோ என்கிற பயமும் விஜய்யிடம் உள்ளது. கட்சி ஆரம்பிப்பதில் பெரும் முனைப்புடன் செயல்படும் சந்திரசேகர், ஜனவரி 16 அன்று, விமர்சையாக கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
சித்ராவின் ஹேண்ட் பேக்கில் போதைப் பொருளா?: திசை மாறும் விசாரணை?சித்ராவின் ஹேண்ட் பேக்கில் போதைப் ... சிம்புவுக்கு ஐ லவ் யூ சொல்ல சொன்ன சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம் சிம்புவுக்கு ஐ லவ் யூ சொல்ல சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
05 ஜன, 2021 - 09:29 Report Abuse
VeeJay Mr S.A.C has right to start a party. It's his life / dream. He don't need Vijay's permission. Vijay, if he doesn't support that's fine. But he shouldn't stop his dad from doing what he wants to do. Everyone has only one life to live.
Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
05 ஜன, 2021 - 08:27 Report Abuse
Suman பல சினிமா ட்ராமாக்களை பார்த்து வளர்ந்தவர்கள்.
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
05 ஜன, 2021 - 07:38 Report Abuse
Indhuindian உங்களுக்கு இருக்கற சாமத்தியத்துக்கும் ஆதரவுக்கும் ஏன் அனைத்திந்திய கட்சி ஒரு அகில உலக கட்சின்னு ஆரம்பிச்சா எல்ல நாடுகளிலேயும் தேர்தலில் போட்டு போடலாமே? ஆனா ஒன்னு இங்கேதான் லெட்டெர் பெட் கட்ச்சிக்கெல்லாம் சில்லறை தேறும் மத்த மாநிலங்களிலேயோ நாட்டிலேயே ஒன்னும் தேறாது அத கொஞ்சம் கவனத்துலே வெச்சிக்கோங்கோ
Rate this:
Manian - Chennai,ஈரான்
05 ஜன, 2021 - 05:37 Report Abuse
Manian அவருக்கு மடடும் ஒரு em.pi, எம் ,எல் .ஏ அல்லது பொது துறை மந்திரியாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்க கூடாதா ? பளனிச்சாமி ஒரு தொண்டர் கூட முதல்வராக்காலமனு சொன்னதை உண்மை என்று நிரூபிக்க ஒரு சாஞ்சு வேண்டாமா? அப்பாலே , ஒரு ஓட்டுக்கு என்ன விலை கொடுக்கணும்னு சொந்த அனுபவம் வரலாமே அதே வச்சுக்கிட்டு கள்ளப்பணத்திலே பின்னாடி விஜயையுமே முதல்வராகலாமே அதுதானே கருணா நாயுடு வழி
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 ஜன, 2021 - 03:33 Report Abuse
J.V. Iyer அப்பாவுக்கும்,மகனுக்கும் இடையில் நடிப்பா, சண்டையா? புரியவில்லை. குழப்புகிறார்கள் அப்பு.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in