நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
கிராமத்து கதைக்களங்களுக்கு பேர் போனவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குவதாக திட்டமிடப்பட்ட படம் ஆத்தா. ஆனால் சில பல காரணங்களால் அப்பட வேலைகள் தள்ளிப் போனது. இந்நிலையில் அப்படத்தினை கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பாரதிராஜா. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "என் இனிய தமிழ் மக்களே 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால்.உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்