தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவைத் தாண்டி அதிகம் வெளியாகாது. அதிலும், தமிழ்ப் படங்கள்தான் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா என மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிகம் வெளியாகும்.
தெலுங்குப் படங்கள் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் வெளியாகும். கன்னடப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் ஓரளவிற்கு வெளியிடப்படும். மலையாளப் படங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு வரவேற்பைப் பெறும்.
ஆனால், 'பாகுபலி' படங்கள் மேலே சொன்ன கணக்குகள் அனைத்தையும் மாற்றியது. தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் வெளியாகி 'பான் இந்தியா' வெளியீடாக வசூலை அள்ளிக் குவித்தது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படமும் இந்தியா முழுவதும் 'பான் இந்தியா' வெளியீடாகவே வெளியானது. அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களும் அதைக் கணக்கில் கொண்டே பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதேப்போன்று கன்னடத்தில் வெளிவந்த கே.ஜி.எப்., படமும் பான் இந்தியா படமாக வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்போது அதன் இரண்டாம் பாகமும் அதே பாணியில் உருவாகி உள்ளது.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' படம் 'பான் இந்தியா' வெளியீடாகத்தான் வெளியிடப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படத்தை இந்தியா முழுவதும் வெளியிட உள்ளார்கள். அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
விஜய் படம் மட்டும்தான் 'பான் இந்தியா' வெளியீடாக வருமா எங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வராதா என தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி, தமிழில் முக்கிய முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டின் போது 'பான் இந்தியா' ரிலீஸ் என்ற குரல் அதிகமாகவே ஒலிக்கும்.