ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'96' படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் 'சீதக்காதி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, படத்துக்கான பூஜையும் போடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக காயத்ரியே நடிக்கிறார். ஏற்கனவே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம்', 'புரியாத புதிர்', 'ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்', 'ரம்மி', 'சீதக்காதி', 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில், காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார். தற்போது, ஏழாவது முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதை மற்ற நடிகைகள் பொறாமையுடன் பார்ப்பதாக கூறப்படுகிறது.




