ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பொதுவாகவே ஆண்டு இறுதியில் அதிகமான படங்கள் வெளிவரும். அந்த ஆண்டுக்கான அரசு மானியம் பெறுவதற்காகவும், விருது பட்டியலில் சேருவதற்காகவும் இப்படி படங்கள் குவியும். அந்த வரிசையில் வருகிற 14ந் தேதி, 11 படங்கள் வெளிவருகிறது.
இதில் விக்ரம் பிரபு, ஹன்சிகா நடித்த துப்பாக்கி முனை, பிரசாந்த் நடித்த ஜானி, ஆகிய படங்கள் தான் முக்கியமான மீடியம் பட்ஜெட் படங்கள். மற்ற அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள். நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபா, திரு ஆகிய சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.
இதுதவிர ஸ்பைடர்மேன் என்கிற ஹாலிவுட் படம் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. அக்குவாமேன் என்கிற படமும் சமுத்திரபுத்ரன் என்ற பெயரில் வெளிவருகிறது. மோகன்லால் நடித்த ஓடியன் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. மொத்தம் 11 படங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.
டிச.,21ல் 9 படங்கள்
இதேப்போன்று அடுத்தவாரம் டிச.,20ல் விஜய் சேதுபதியின் சீதக்காதி, டிச.,21ல், ஜெயம் ரவியின் அடங்கமறு, தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், விஷால் வெளியிடும் கன்னட டப்பிங்கான கேஜிஎப்., ஷாருக்கானின் ஹிந்தி படமான ஜீரோ, தெலுங்கு படமான பாடி பாடி லெச்சே மனசு என 9 படங்கள் ரிலீஸாகின்றன. இத்தனை படங்களில் எத்தனை படங்களுக்கு தியேட்டர் கிடைக்க போகிறது என தெரியவில்லை.