'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் சினிமா பிரபலங்கள் டுவிட்டரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டிரென்டிங்கிலும் டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் தான் பிரபலமானவை. அந்த விதத்தில் பேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளி டுவிட்டர் தான் அதிகமாக பேசப்படுகிறது.
2018ம் ஆண்டுக்கான டுவிட்டர் ஹேஷ்டேக்குகளில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள 'விஸ்வாசம்' ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் பரத் அனி நேனு, 4வது இடத்தில் அரவிந்த சமேதா, 5வது இடத்தில் ரங்கஸ்தலம், 6வது இடத்தில் காலா, 7வது இடத்தில் பிக் பாஸ் தெலுங்கு 2, 8வது இடத்தில் மீடூ, 9வது இடத்தில் விசில் போடு, 10வது இடத்தில் ஐபிஎல் 2018 ஆகியவை இடம் பெற்றுள்ளன.
டாப் 10 இடங்களில் “சர்கார், விஸ்வாசம், காலா, விசில் போடு” ஆகியவை தமிழ்நாடு சம்பந்தப்பட்டவை. தென்னிந்திய அளவில் டுவிட்டரைப் பொறுத்தவரையில் 'சர்கார்' மூலமாக விஜய்யும், 'விஸ்வாசம்' மூலமாக அஜித்தும் தான் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் அனைவரும் இவர்களுக்குப் பிறகுதான் இருக்கிறார்கள்.