அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்திற்கான புரோமோசன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாடல் சிங் டிராக், போஸ்டர் என அவ்வப்போது வெளியிட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார் படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்ராஜ். அந்தவகையில் படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடலை டிசம்பர் 3 ம் தேதி வெளியிடப்பட்டது. பாக்கத்தான போற காளியோட ஆட்டத்த என துவங்கும் இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடி உள்ளார். இப்பாடல் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் 2வது பாடல் சிங் டிராக் நாளை (டிச.,07) வெளியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். ஊலல்லலா... என இந்த பாடல் துவங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பாக பாடல் காட்சி ஒன்றில் ரஜினி ஆடுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.