சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ்த் திரையுலகத்தில் குறைவான படங்களில் நடித்தாலும் 'சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். 2012ம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தியிருந்தார் ஜெனிலியா.
சுமார் 6 வருடங்கள் கழித்து அவர் தயாரிக்க அவரது கணவர் ரித்தேஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'மௌலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த ஆறு வருடங்களில் ஒரு ஹிந்தி, ஒரு மராத்தி படத்தில் சில வினாடிகள் மட்டுமே இடம் பெறும் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். இப்போது ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். விரைவில் நாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்தது பற்றி ரித்தேஷ் கூறுகையில், “படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்று வைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, அதில் ஜெனிலியா மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்,” என்றார். கணவருடன் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் தோன்றுகிறார் ஜெனிலியா.