மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகளை கேட்டும் பிடிக்காமல் இருந்து வந்த அவர், தற்போது அகம்பாவம் என்ற படத்தில் நடிக்கிறார். சத்ரபதி படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்க, வாராகி வில்லனாக நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.
இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்காக 10 உடல் எடை குறைத்துள்ள நமீதா, பத்திரிகையாளராக நடிக்கிறார்.
பெண் போராளிக்கும் ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த அகம்பாவம் படத்தின் கதை. வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளை கதையாக்க, அதற்கு திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்குகிறார் ஸ்ரீமகேஷ்.
கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. முதற்கட்டமாக கோர்ட்டில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்கள் படமாக்குகின்றனர். தமிழ்சினிமாவில் நீதிமன்றம் ஒன்றில் ஒரு பெண் ஒருவரின் துணிச்சலான வாதம், இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியாக இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. இந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுதும் நமீதாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் என அடித்து சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ். அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறாராம் நமீதா.




